







உலகச் செய்திகள்
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் ‘புதுப்பேட்டை’ திரைப்படம்
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ஜூலை 26ல்புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ரிலீஸ் ஆகிறது.2006 ஆம் ஆண்டுசெல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில்தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.யுவன் சங்கர்ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.புதுப்பேட்டைதிரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட்கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Read more
பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31நாட்களுக்கு நிறுத்தம்!
வருடாந்திர பராமரிப்பு பணிக்காக பழனி மலை முருகன் கோயிலில் இயங்கும்ரோப்கார் சேவை வரும் 15ம் தேதி முதல் 31 நாட்கள் இடைநிறுத்தம் செய்யப்படும்என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனிடையே, பக்தர்கள் மலைக்கோயிலுக்குச்செல்ல வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழிகளை பயன்படுத்தலாம் எனவும்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more
சீனாவில் பயங்கர புயல் – 800 விமானங்கள் ரத்து
சீனாவின் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது. மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சீனாவில் விமானம் தரையிறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருப்பிடங்களிலிருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறு மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த புயல் காற்றினால் 50 கிலோவுக்கும் குறைவான எடைகொண்டவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக சீனாவிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சீனா எதிர்கொள்ளும் பெரிய புயல் தாக்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more
“பழிக்குப் பழி..” அமெரிக்கா மீது 34% இறக்குமதி வரியை அறிவித்த சீனா! தொடங்கியது வர்த்தக போர்?
பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% ஆக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது. சீன வர்த்த அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. மேலும், கணினி பாகங்கள், மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய உலோகம் மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு, அமெரிக்காவின் 27 நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை அல்லது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஹை பாயின்ட் ஏரோடெக்னாலஜிஸ், போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான யுனிவர்சல் லாஜிஸ்டிக்ஸ் ஹோல்டிங் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது. “அமெரிக்கா விதித்துள்ள ‘பரஸ்பர வரிகள்’ உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறுவதாகவும், உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக சேதப்படுத்துவதாகவும், விதிகள் சார்ந்த பலதரப்பு வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கை கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகவும் உள்ளது. இது உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒருதலைப்பட்சமான, கொடுமைப்படுத்தக்கூடிய நடைமுறையாகும். சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது,” என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Read more
ரத்தக்களறியாக மாறிய உலக வர்த்தகம்! டிரம்ப்பால் பல லட்சம் கோடி அழிந்தது!
உலக அளவில் அடுத்தடுத்து பல நாடுகளின் சந்தைகள் சரிவு அடைந்து உள்ளது. ஒரே நாளில் உலக மார்க்கெட் கதற தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போரால் மார்க்கெட் சரிவு உச்சம் அடைந்து உள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து இருந்தார். அவர் எச்சரித்தபடியே உலக அளவில் பங்குச்சந்தை சரிய தொடங்கி உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம் பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான், என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
Read more
இந்தியச் செய்திகள்
NEET MDS 2025 நுழைவுச் சீட்டு இன்று வெளியாகிறது.. எவ்வாறு பதிவிறக்குவது?
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) NEET MDS நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது. NBEMS இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நுழைவுச் சீட்டுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (NEET) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான natboard.edu.in இல் அணுகலாம்.NEET MDS தேர்வு ஏப்ரல் 19 ஆம் தேதி கணினி அடிப்படையிலான தேர்வு வடிவத்தில் நடைபெற உள்ளது. முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் NEET MDS நுழைவுச் சீட்டு 2025 ஐப் பதிவிறக்கம் செய்யலாம். NEET MDS 2025 நுழைவுச் சீட்டை எவ்வாறு பதிவிறக்குவது? 1. natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ NBEMS இணையதளத்தைப் பார்வையிடவும். 2. ‘NEET MDS அட்மிட் கார்டு 2025’க்கான இணைப்பைக் கண்டறியவும். 3. உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பிவிடப்பட இணைப்பைக் கிளிக் செய்யவும், அங்கு நீங்கள் உங்கள் சான்றுகளை உள்ளிட வேண்டும். 4. பின்னர் NEET MDS 2025 நுழைவுச் சீட்டு திரையில் தோன்றும். 5. எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து சேமிக்கவும். NEET MDS தேர்வுக்கான டெமோ இணைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கிறது என்பதை வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வேட்பாளர்கள் நேரடியாக டெமோவை அணுகலாம். NEET MDS தேர்வு முறை: NEET MDS தேர்வு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவற்றுடன் நேரப் பிரிவுகளும் உள்ளன. திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி:
Read more
அதிரடி..!! இனி பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது..!! வருகிறது புதிய நடைமுறை..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
புதுடில்லி: 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தும் திட்டம் இம்மாத இறுதியில் டில்லியில் அமல் செய்யப்பட உள்ளது.டில்லியில் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கையும் முக்கிய காரணம். பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், பழைய வாகனங்கள் மூலம் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் ஆகியவற்றுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இருப்பினும், அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நம்பர் பிளேட் எண் அடிப்படையில் வாகன விவரங்களை கண்டறியும் தானியங்கி கேமரா நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் அரசின் திட்டம் தள்ளிக்கொண்டே வந்தது. இந் நிலையில், டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆகியோர் திட்டத்தை அமல்படுத்து குறித்து ஆலோசித்து வருகின்றனர்.தற்போது நகரின் 500 எரிபொருள் நிலையங்களில், 477ல் தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு விட்டன. 23 மட்டுமே மீதமுள்ளன. அதுவும் அடுத்த 10 நாட்களுக்குள் தயார் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் தடை உத்தரவு இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more
தமிழகச் செய்திகள்
ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில்வளையங்காட்டில் 17ஆம் ஆண்டு அன்னதான விழா
ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும் 17ஆம் ஆண்டு அன்னதான விழா வளையங்காடு மாகாளியம்மன் கோவில் திடலில் இன்று சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின்திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் KCMB.சீனிவாசன் ஜி கலந்து கொண்டுஅன்னதான விழாவை துவக்கி வைத்தார்.உடன்,GKS.பாலுஜிமாவட்டதுணைத் தலைவர்,R.கோவிந்தசாமி விவசாய அணி மாநில துணைத்தலைவர்,கார்த்திக் OBC அணி மாவட்ட தலைவர்,SM.தம்பி தங்கவேல் விவசாய அணிமாவட்ட பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Read more
திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் விழா
திருப்பூர், காங்கேயம் சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்பட்டது.அத்திப்பூ கோலமிட்டும்,கேரள பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்தும் மாணவிகள் விழாவினைக் கொண்டாடினர்.
Read more
வெள்ளலூரில் பாண்டிய வேளாளர் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
கோவை மாவட்டம் வெள்ளலூரில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 27.07.2025 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு சங்க நிர்வாகி R. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.இந்த விழா நிகழ்ச்சிக்கு வெள்ளலூர் சங்கத் தலைவர் E.K. கோதண்டசாமி தலைமையேற்பட்டார். மேலும், மதுக்கரை ஊராட்சி அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் மாரியப்பன் சிவகாமி சுந்தரி அவர்களின் மகன் சுந்தரமூர்த்தி,பத்தாம் வகுப்பில் வெள்ளலூர் சமுதாய அளவில் முதலிடம் பெற்ற சக்திவேல் – உமா அவர்களின் மகள் மிருத்யா ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இந்த விழாவில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இறுதியாக, தங்கவேல் (லக்ஷ்மி ஸ்டுடியோ) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
Read more
திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கம் சார்பில்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்
திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கவளாகத்தில், பள்ளிகுழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புப் பணியின் ஒரு பகுதியாக, நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்,திருப்பூர்மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கத்தின் தலைவர் A.மணி அவர்களின்தலைமையில்,பழனிபாண்டியவேளாளர் சங்கத்தின் துணைத் தலைவர் K.C.K.சரவணன்,அறங்காவலர்கள் S.M.சீனிவாசன், K.R.முருகானந்தம், செயற்குழு உறுப்பினர்K.N.முருகானந்தம், திருப்பூர் மாவட்ட பாண்டிய வேளாளர் சங்க அவைத்தலைவர்C.K.காளிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் A.தங்கவேல், C.ஆனந்தன், ராமசாமிஉள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்கினர்.சமூக நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக பாண்டியவேளாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.
Read more
தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கோரிக்கை மனு
பொங்குபாணையம், அய்யம்பாளையம், கிருஷ்ணா நகர்,சக்தி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்.இந்த பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும், இப்பகுதிக்கு அரசு பேருந்து போக்குவரத்தும் இல்லை என்பதால், பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வயதானவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கலெக்டரிடம் தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
Read more
கேப்டன் மறைந்தாலும் மறையாத மனித நேயம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவப்புதல்வன் சண்முக பாண்டியன் நடித்து வெளிவந்த படை தலைவன் திரைப்படம் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில்வெளியிடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படம் காண்பதற்கு முன்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறிகுழந்தை வேல் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேமுதிகவினர் குஜராத் மாநிலத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தேமுதிக நிர்வாகிகள் பின்பு படைத்தலைவன் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.மேலும் இத்திரைப்படம் மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்ததாக பெருமையோடு தெரிவித்தனர்.இதில் பகுதி கழகச் செயலாளர்கள் உதயா பிரபு,சண்முகராஜா,ஆனந்தன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கருப்புசாமி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் முத்துக்குமார பாண்டி,ரத்தினம்,திருமதி ஷர்மிளா பாரதி மற்றும் தேமுதிக மாநகர் மாவட்ட பகுதி வார்டு நிர்வாகிகள் பெருந்திரளாக இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர்.
Read more
விளையாட்டுச் செய்திகள்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்கியிருந்த சொகுசு ஓட்டலில் திடீர் தீ விபத்து..!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியின் வீரர்கள் தங்கியிருந்தனர். சொகுசு ஹோட்டலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஸ்பாவில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவ தொடங்கியது. வீரர்கள் அனைவரும் தங்கள் அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். SRH அணி பேருந்தில் வெளியேறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகின்றன. தீ எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விபத்துக்குக் காரணமான காரணிகள் குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. ஹோட்டல் ஊழியர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். குறிப்பிடத்தக்க சேதம் இல்லாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தால் ஹோட்டலில் இருந்த விருந்தினர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
Read more
இன்றும் 3 கேட்ச் டிராப்.. சிஎஸ்கே பீல்டர்களா.. கூடுதலாக 50 ரன்கள் விளாசிய பஞ்சாப்.. கதறும் ரசிகர்கள்
சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார். அதிரடி வீரரான நேஹல் வதேராவை 9 ரன்களில் வீழ்த்திய அஸ்வின், பின்னர் வந்த மேக்ஸ்வெல்லை 1 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முகேஷ் சவுத்ரி வீசிய 2வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஸ்டாய்னிஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மறுமுனையில் அதிரடியாக ரன்களை குவித்த பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 75 ரன்களை விளாசியது. அதிலும் அஸ்வின் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. நேஹல் வதேரா சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். இருந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அஸ்வினை 7வது ஓவரை வீசுவதற்கு அழைத்தார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே நேஹல் வதேராவை 9 ரன்களில் அஸ்வின் வீழ்த்த, தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லையும் அதே ஓவரில் வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். அஸ்வினின் பவுலிங்கில் மேக்ஸ்வெல் ஆட்டமிழப்பது 7வது முறையாகும். சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின், கடைசி ஓவரில் மீண்டும் 3 சிக்ஸ் உட்பட 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் அஸ்வின் 4 ஓவர்களில் 5 சிக்ஸ் உட்பட 48 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்தடுத்து பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஷஷாங்க் சிங் அதிரடி காரணமாக எழுச்சி பெற்றுள்ளது. இதனால் சிஎஸ்கே கம்பேக் கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Read more
சினிமா செய்திகள்
கேப்டன் மறைந்தாலும் மறையாத மனித நேயம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவப்புதல்வன் சண்முக பாண்டியன் நடித்து வெளிவந்த படை தலைவன் திரைப்படம் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில்வெளியிடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படம் காண்பதற்கு முன்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறிகுழந்தை வேல் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேமுதிகவினர் குஜராத் மாநிலத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தேமுதிக நிர்வாகிகள் பின்பு படைத்தலைவன் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.மேலும் இத்திரைப்படம் மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்ததாக பெருமையோடு தெரிவித்தனர்.இதில் பகுதி கழகச் செயலாளர்கள் உதயா பிரபு,சண்முகராஜா,ஆனந்தன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கருப்புசாமி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் முத்துக்குமார பாண்டி,ரத்தினம்,திருமதி ஷர்மிளா பாரதி மற்றும் தேமுதிக மாநகர் மாவட்ட பகுதி வார்டு நிர்வாகிகள் பெருந்திரளாக இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர்.
Read more
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருப்பூர் மாணவர்கள் பதக்கப் பலம்!
திருப்பூர் குமரன் குத்துச்சண்டை கழக மாணவர்கள் 2 வெள்ளி,5 வெண்கலப் பதக்கங்கள் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர் விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் சங்கமம் கலைக்கல்லூரியில் கடந்த மே 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான INVITATIONAL BOXING CHAMPIONSHIP போட்டியில்,தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைக் குறிப்பாக Tirupur Kumaran Boxing Club மாணவர்கள் தங்கள் தேர்ச்சியான நடிப்பினால் கவனம் ஈர்த்தனர்.கீழ்காணும் மாணவர்கள் பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெள்ளிப் பதக்கம்:கி. மோனிஷ் – 50-55 கிலோ எடை பிரிவு,பரத் குமார் – 60-64 கிலோ எடை பிரிவு.வெண்கல பதக்கம்: யாதவ் – 44 கிலோ எடை பிரிவு,கவியரசு – 50-52 கிலோ எடை பிரிவு,முத்தமிழன் – 46-48 கிலோ எடை பிரிவு,நந்தீஸ்வரன் – 47-50 கிலோ எடை பிரிவு,முத்துசாரதி – 70-75 கிலோ எடை பிரிவு.இவ்வாறு மொத்தம் 7 பதக்கங்கள் (2 வெள்ளி,5 வெண்கல) பெற்று,இரண்டுநாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருப்பூர் மாணவர்கள் தங்கள் சாதனைகளால் அனைவரையும் கவர்ந்தனர்.இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்சியாளர் திரு.கா.ஜெகத்ரட்சகன்,மாணவர்களை பாராட்டி,மேலும் உயர்ந்த சாதனைகளுக்காக உற்சாகம் அளித்தார்.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more
ரூ.5 கோடி சம்பளத்தை உயர்த்திய அஜித்..!! குட் பேட் அக்லி படத்திற்கு எவ்வளவு..? த்ரிஷா, அர்ஜுன் தாஸ், ஜிவி பிரகாஷுக்கு எவ்வளவு தெரியுமா..?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.இந்நிலையில், திரைப்படம் ஏப்ரல் 10 திரையரங்குகளில் வெளியானது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் உலகளவில் 4 நாட்களில் ரூ.155 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்திற்கு ரூ.105 கோடி அஜித் சம்பளமாக வாங்கிய நிலையில், இப்படத்திற்கு தனது ஊதியத்தை ரூ.5 கோடி உயர்த்தியுள்ளார். இதனால் குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நடிகை த்ரிஷாவுக்கு ரூ.4 கோடியும், வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ரூ.50 லட்சமும், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த சுனிலுக்கு ரூ.50 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.3 கோடி ஊதியம் கொடுக்கக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு ரூ.4 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.190 கோடி முதல் ரூ 200 கோடி வரை தான் இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more
1800 கோடி வசூல் நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு..
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஹீரோவான அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த புஷ்பா 2 ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் அவருடைய புதிய படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.43 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அல்லு அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் புஷ்பா 2 திரைப்படத்திற்காக ரூ. 300 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Read more
ஆரோக்கியச் செய்திகள்
குழந்தைகளுக்கு டீ கொடுக்குறீங்களா..? ரொம்ப டேஞ்சர்..
மாறிவரும் வாழ்க்கை முறையால், குழந்தைகள் இளம் வயதிலேயே துரித உணவுகளுக்குப் பழக்கமாகி வருகின்றனர். இதனால் இளம் வயதிலேயே பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேநீர் அப்படிப்பட்ட ஒரு துரித உணவு கலாச்சாரம். ஏனென்றால் தேநீர் குடிப்பதால் சில பக்க விளைவுகளும் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்.தேநீரில் காஃபின் உள்ளது. இது குழந்தைகளுக்கு தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகளுக்கு தேநீர் கொடுப்பது நல்லதல்ல. தேநீருக்குப் பதிலாக மற்ற ஆரோக்கியமான பானங்கள் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல் அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் இருக்கும்போது தேநீர் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறார்கள். ஏனெனில் தேயிலை இலைகளில் மூலிகை பண்புகள் உள்ளன. இருப்பினும், இதில் மூலிகைகளுடன் சேர்ந்து, போதை தரும் காஃபின் என்ற பொருளும் உள்ளது. இது ஒரு வகையில் பெரியவர்களையும், மற்றொரு வகையில் குழந்தைகளையுமே பாதிக்கிறது. நீங்கள் தேநீர் குடிக்கும்போது, அதில் உள்ள காஃபின் மூளையைத் தூண்டுகிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இது பெரியவர்களுக்கு நல்லது. இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு தூக்கத்தைத் தடுக்கிறது. ஆனால் இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. தேநீர் குடிப்பதால் குழந்தைகளின் மூளை நீண்ட நேரம் தூக்கம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. பெரியவர்கள் தேநீர் குடிக்கும்போது, அதில் உள்ள காஃபின் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் உடலை விட்டு வெளியேறுகிறது. ஆனால் குழந்தைகள் தேநீர் குடித்தால், அது அவர்களின் உடலை விட்டு வெளியேற 10 முதல் 12 மணி நேரம் ஆகும். பக்க விளைவுகள் : உடலுக்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் தேவை. நாம் உண்ணும் உணவில் இருந்து உடல் இரும்பு மற்றும் கால்சியத்தை உறிஞ்சுகிறது. தேநீர் குடிப்பது இந்த செயல்முறையை மெதுவாக்குகிறது. வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, குறிப்பாக குழந்தைகளில். இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தேநீர் ஒரு சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதனால்தான் தேநீர் குடிப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்கிறார்கள். தேநீர் குடிப்பதால் சில குழந்தைகளுக்கு எரிச்சல், கோபம் அல்லது தலைவலி கூட ஏற்படலாம். தேநீருக்குப் பதிலாக நல்லது: தேநீருக்கு பதிலாக மஞ்சள் பால் குடிப்பது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. குழந்தைகளுக்கு புதினா தேநீர், சூடான எலுமிச்சை மற்றும் தேன் தண்ணீர் நல்லது. இவை தொண்டைப் புண்ணைக் குணப்படுத்துகின்றன. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
Read more
பகலில் தூங்குபவரா நீங்கள்?.. சோர்வாக உள்ளதா.. அப்போ இந்த நோய் கன்ஃபார்ம்.. என்னனு பாருங்க
பகல் நேரத்தில் அதிகமாக தூங்கும் பழக்கம் மற்றும் சோர்வாக உள்ள நபர்களுக்கு டிமென்ஷியா மறதி நோய்க்கான வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவசரமான இந்த உலகில் வேலைப் பளு, கல்வி, அதீத கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை ஏற்பட்டு பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். தூக்கமின்மையால் கோபம், எரிச்சல் மற்றும் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகமாக தூங்குபவர்கள் மற்றும் உற்சாகமே இல்லாமல் சோர்ந்து காணப்படுபவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகளவில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் உலக அளவில் 5.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வசிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 சதவீதம் பேர் அல்சைமர் எனும் பொதுவான மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனராம். உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களில் இந்த டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏழாவது முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நோயால் பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதும், அவர்களின் ஆயுள் காலம் இதனால் குறைவதும் தெரியவந்துள்ளது. இளமைக் காலத்தில் தூக்கம் என்பதை இழப்பது முதுமையில் பல்வேறு பிரச்னைகளை நமக்கு ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு பகலில் அடிக்கடி தூக்கம் வருவது அல்லது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்ந்து காணப்பட்டாலோ டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. முதியவர்களுக்கு ஏற்படும் மறதி குறித்து நியூயார்க்கில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான முடிவுகள் நியூராலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பகல் நேரங்களில் வயதானவர்களுக்கு மிகவும் அதிகமாக தூக்கம் வருவது போன்று இருந்தாலோ அல்லது எந்த வேலையையும் செய்ய தோன்றாமல் சோர்வாக காணப்படுவது டிமென்ஷியா மறதி நோய்க்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. மேலும், முதியவர்களில் பலருக்கு நியாபக சக்தி, அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. 76 வயதுடைய 445 பேரிடம் சுமார் மூன்றாண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நியாபக சக்தி, தூக்கம், நடப்பது உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் பகல் நேரங்களில் தூங்குவது, சோர்ந்து காணப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு 35. 5 சதவீதம் டிமென்ஷியா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வில் 268 பேருக்கு நன்றாக தூங்கி எழுவதாகவும், 177 பேர் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது ஏற்கனவே 42 பேருக்கு நியாபக சக்தியில் பிரச்னை இருப்பதும், 36 பேருக்கு நியாப சக்தியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் ஆய்வாளர் விக்டோயர் லெராய் கூறுகையில், தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வின் மிக முக்கிய நோக்கம். தூக்கமின்மையால் அவதிப்படும் மக்கள் கட்டாயம் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற வேண்டும். இதன் மூலம் அறிவுத் திறனில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம் என்றார்.
Read more
