Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Category: ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு டீ கொடுக்குறீங்களா..? ரொம்ப டேஞ்சர்..

மாறிவரும் வாழ்க்கை முறையால், குழந்தைகள் இளம் வயதிலேயே துரித உணவுகளுக்குப் பழக்கமாகி வருகின்றனர். இதனால் இளம் வயதிலேயே பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேநீர் அப்படிப்பட்ட ஒரு துரித உணவு கலாச்சாரம். ஏனென்றால் தேநீர் குடிப்பதால் சில பக்க விளைவுகளும் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்.தேநீரில் காஃபின் உள்ளது. இது குழந்தைகளுக்கு தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகளுக்கு தேநீர் கொடுப்பது நல்லதல்ல. தேநீருக்குப் பதிலாக மற்ற ஆரோக்கியமான பானங்கள் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல் அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் இருக்கும்போது தேநீர் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறார்கள். ஏனெனில் தேயிலை இலைகளில் மூலிகை பண்புகள் உள்ளன. இருப்பினும், இதில் மூலிகைகளுடன் சேர்ந்து, போதை தரும் காஃபின் என்ற பொருளும் உள்ளது. இது ஒரு வகையில் பெரியவர்களையும், மற்றொரு வகையில் குழந்தைகளையுமே பாதிக்கிறது. நீங்கள் தேநீர் குடிக்கும்போது, ​​அதில் உள்ள காஃபின் மூளையைத் தூண்டுகிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இது பெரியவர்களுக்கு நல்லது. இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு தூக்கத்தைத் தடுக்கிறது. ஆனால் இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. தேநீர் குடிப்பதால் குழந்தைகளின் மூளை நீண்ட நேரம் தூக்கம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. பெரியவர்கள் தேநீர் குடிக்கும்போது, ​​அதில் உள்ள காஃபின் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் உடலை விட்டு வெளியேறுகிறது. ஆனால் குழந்தைகள் தேநீர் குடித்தால், அது அவர்களின் உடலை விட்டு வெளியேற 10 முதல் 12 மணி நேரம் ஆகும்.  பக்க விளைவுகள் : உடலுக்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் தேவை. நாம் உண்ணும் உணவில் இருந்து உடல் இரும்பு மற்றும் கால்சியத்தை உறிஞ்சுகிறது. தேநீர் குடிப்பது இந்த செயல்முறையை மெதுவாக்குகிறது. வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, குறிப்பாக குழந்தைகளில். இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தேநீர் ஒரு சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதனால்தான் தேநீர் குடிப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்கிறார்கள். தேநீர் குடிப்பதால் சில குழந்தைகளுக்கு எரிச்சல், கோபம் அல்லது தலைவலி கூட ஏற்படலாம். தேநீருக்குப் பதிலாக நல்லது: தேநீருக்கு பதிலாக மஞ்சள் பால் குடிப்பது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. குழந்தைகளுக்கு புதினா தேநீர், சூடான எலுமிச்சை மற்றும் தேன் தண்ணீர் நல்லது. இவை தொண்டைப் புண்ணைக் குணப்படுத்துகின்றன. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
Read more

பகலில் தூங்குபவரா நீங்கள்?.. சோர்வாக உள்ளதா.. அப்போ இந்த நோய் கன்ஃபார்ம்.. என்னனு பாருங்க

பகல் நேரத்தில் அதிகமாக தூங்கும் பழக்கம் மற்றும் சோர்வாக உள்ள நபர்களுக்கு டிமென்ஷியா மறதி நோய்க்கான வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவசரமான இந்த உலகில் வேலைப் பளு, கல்வி, அதீத கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை ஏற்பட்டு பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். தூக்கமின்மையால் கோபம், எரிச்சல் மற்றும் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகமாக தூங்குபவர்கள் மற்றும் உற்சாகமே இல்லாமல் சோர்ந்து காணப்படுபவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகளவில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் உலக அளவில் 5.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வசிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 சதவீதம் பேர் அல்சைமர் எனும் பொதுவான மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனராம். உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களில் இந்த டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏழாவது முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நோயால் பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதும், அவர்களின் ஆயுள் காலம் இதனால் குறைவதும் தெரியவந்துள்ளது. இளமைக் காலத்தில் தூக்கம் என்பதை இழப்பது முதுமையில் பல்வேறு பிரச்னைகளை நமக்கு ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு பகலில் அடிக்கடி தூக்கம் வருவது அல்லது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்ந்து காணப்பட்டாலோ டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. முதியவர்களுக்கு ஏற்படும் மறதி குறித்து நியூயார்க்கில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான முடிவுகள் நியூராலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பகல் நேரங்களில் வயதானவர்களுக்கு மிகவும் அதிகமாக தூக்கம் வருவது போன்று இருந்தாலோ அல்லது எந்த வேலையையும் செய்ய தோன்றாமல் சோர்வாக காணப்படுவது டிமென்ஷியா மறதி நோய்க்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. மேலும், முதியவர்களில் பலருக்கு நியாபக சக்தி, அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. 76 வயதுடைய 445 பேரிடம் சுமார் மூன்றாண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நியாபக சக்தி, தூக்கம், நடப்பது உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் பகல் நேரங்களில் தூங்குவது, சோர்ந்து காணப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு 35. 5 சதவீதம் டிமென்ஷியா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வில் 268 பேருக்கு நன்றாக தூங்கி எழுவதாகவும், 177 பேர் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது ஏற்கனவே 42 பேருக்கு நியாபக சக்தியில் பிரச்னை இருப்பதும், 36 பேருக்கு நியாப சக்தியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் ஆய்வாளர் விக்டோயர் லெராய் கூறுகையில், தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வின் மிக முக்கிய நோக்கம். தூக்கமின்மையால் அவதிப்படும் மக்கள் கட்டாயம் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற வேண்டும். இதன் மூலம் அறிவுத் திறனில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம் என்றார்.
Read more

Category

Tags

Trending

WhatsApp
Instagram