Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Author: admin

“அசாத்திய யோகத் திறனால்அசத்தும் எட்டாம் வகுப்பு மாணவி”

“Gen Z” என்ற ஒரே அடையாளத்திற்குள் எல்லா டிஜிட்டல் உலகின் பயன்பாட்டு மிகுதியால் கவனச்சிதறலால் திண்டாடும் மாணவர்களுக்கு மத்தியில்,பொழுதுபோக்கு என்றாலே ரீல்ஸ்,ஷார்ட்ஸ்,கைபேசி விளையாட்டுகள்,திரையரங்கம் என்று எளிதில் கவனத்தை திசை திருப்ப பல வாய்ப்புகள் விரிந்து..மேல்நாட்டு உணவுகள்,துரித உணவுகள் என்று உடல்நலத்தை நசுக்க வாய்ப்புகள் தெருவுக்குத் தெரு பெருகி..நல்லது/கெட்டதை சுய விருப்பு வெறுப்போடு அணுகும் சூழல் பரவலாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் உடல், மனது,ஆன்மா மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்கும் யோகக் கலையை ஐந்து வயது முதல் தன்னோடு இணைத்து அதைத் தன் விருப்பக் கலையாக்கி தனித்துவமாக மிளிர்கிறார் எட்டாம் வகுப்பு மாணவி ரூபன்யா. அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகாடமி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ரூபன்யா.சிறு வயதில் இருந்தே யோகக் கலையில் தன்னை ஈடுபடுத்திஇதுவரை இருபத்தி ஒன்று மாநில அளவிலான போட்டியிலும்,இருபது மாவட்ட அளவிலான போட்டியிலும்,இரண்டு தேசிய அளவிலான போட்டியிலும்,நான்கு சர்வதேச அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று பரிசுகளையும் வென்று இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பு சான்றிதழ்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களையும் பெற்று தன் யோக ஆசானுக்கும்,பெற்றோருக்கும்,பள்ளிக்கும் பெருமை சேர்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசை வென்று புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி அவர்களின் கரங்களால் பரிசினைப் பெற்று தன் யோகத் திறமையை நிரூபித்துள்ளார். ஒன்பது வருடங்களாக இக்கலையில் சுழலும் ரூபன்யா பயிற்சியும் முயற்சியும் கைகூடி தன் உடலின் நெகிழ்வுத்தன்மையால் மிக லாவகமாக கடினமான ஆசனங்களையும் எளிதாக செய்து காண்போரை வியப்பூட்டுகிறார். தன் அண்ணன் யோகா பயிற்சி செய்வதை பார்த்ததன் மூலம் அவருக்கு யோகாவில் ஆர்வம் ஏற்பட்டது என்றும்.. மேலும், அவரது யோகா பயிற்றுவிப்பாளர்கள் சங்கர் மற்றும் உமா மகேஸ்வரி அவர்கள் தன்னைத் தொடர்ந்து ஊக்குவித்து அதிகமாக பயிற்சி செய்ய தூண்டியதால் தான் பல்வேறு வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ரூபன்யா. மாணவியின் இந்த சாதனையை பள்ளி தாளாளர்,நிர்வாக அதிகாரி ,முதல்வர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டியுள்ளனர். யோகக் கலையில் இவரது வெற்றியும் திறமையும் தனித்துவமும் மற்ற மாணவர்களுக்கும் யோகாவில் ஈடுபட ஊக்கமளிக்கிறது. தன்னுள்.. தனக்காக..தன்னைத்தேடிய ரூபன்யாவின் யோகாப் பயணம் தொடர்ந்து அவளின் இலக்கை நோக்கி இலகுவாக அவளை நகர்த்தட்டும்.தொடர்ந்து வெற்றியோடு பயணிக்க வாழ்த்துக்கள் ரூபன்யா.
Read more

‘தனது மகனின் உயிரைக் காத்த பிரதமர் மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்’ – ஆவடியைச் சேர்ந்த தாய் சுகந்தி நெகிழ்ச்சி

எனது மூன்று வயது மகன் மோனிஷ்வரின் உயிரைக் காக்க உரிய நேரத்தில் நிதி உதவி வழங்கி, மறுவாழ்வு அளித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆவடியைச் சேர்ந்த சிறுவனின் தாயார் சுகந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி – பெருமாள் தம்பதியினரின் மகன் மோனிஷ்வர் (3). இவர் ‘பீட்டா தலசீமியா மேஜர்’ (Beta Thalassemia Major) எனும் கடுமையான இரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்குத் தீர்வாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplant) செய்ய வேண்டும் என்றும், அதற்கு சுமார் ₹9.46 லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் (HVF) பணிபுரியும் தந்தை பெருமாள் மற்றும் தாய் சுகந்தி ஆகியோரால் இந்த பெரும் தொகையைத் திரட்ட இயலாத சூழல் இருந்தது. பிரதமரின் உடனடித் தலையீடு:குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நிலையை விளக்கி, நிதியுதவி கோரி கடந்த மார்ச் 27, 2025 அன்று சுகந்தி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தாயின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் அலுவலகம் (PMO), சிறுவனின் சிகிச்சைக்காக ₹8,51,400 நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்தது.தாய் சுகந்தி விடுத்துள்ள நெகிழ்ச்சியான அறிக்கை: ‘எனது மகனின் நிலைமையைக் கண்டு நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தோம். ஐந்து வயதிற்குள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தால்தான் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில், ஒரு சாதாரணத் தாயின் குரலுக்கு மதிப்பளித்து, எனது மகனின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய பிரதமர் அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஜூலை 21, 2025 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று எனது மகன் மோனிஷ்வர் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறான். ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்த பிரதமரின் இந்த உதவி, எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு அரசு மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது’ என்றார்.இந்த நிகழ்வு, இக்கட்டான மருத்துவச் சூழல்களில் மத்திய அரசு எவ்வளவு விரைவாகவும், அக்கறையுடனும் செயல்படுகிறது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. உரிய நேரத்தில் கிடைத்த இந்த நிதியுதவி, ஒரு சிறுவனின் எதிர்காலத்தை மீட்டெடுத்துள்ளது.
Read more

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில்பெற்றோர்–ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் இன்று பெற்றோர்–ஆசிரியர் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கல்வியாண்டில் மாணவிகளின் கல்வி முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் எதிர்காலம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரிச்செயலர் அருட்சகோதரி முனைவர் அருள்சீலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இ. சேனாவரையன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெற்றோர்–ஆசிரியர் ஒத்துழைப்பு மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை என அவர் வலியுறுத்தினார். கல்லூரிச்செயலர் அருட்சகோதரி முனைவர் அருள்சீலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இ. சேனாவரையன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெற்றோர்–ஆசிரியர் ஒத்துழைப்பு மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை என அவர் வலியுறுத்தினார்.
Read more

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அகில பத்திரிகை ஊடக சங்கம் அஞ்சலி

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அகில பத்திரிகை ஊடக சங்கம் மாநில தலைவர் S.நெல்லை அசரீயா, மாநிலபொதுச் செயலாளர் கோபிநாத்,அட்வகேட் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.மறைந்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து, அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
Read more

இந்து பாதுகாப்பு படை சார்பில் ஈரோட்டில் இந்து எழுச்சி மாநாடு

ஈரோட்டில் நடைபெற்ற இந்து பாதுகாப்பு படை நடத்தும் இந்து எழுச்சி மாநாட்டில்,இந்துசமத்துவ கட்சி தலைவர் உழைப்பாளி பூபாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தமாநாட்டில் இந்து சமத்துவ கட்சி மற்றும் தமிழக இந்து மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் ரா.ஈஸ்வர பாண்டியன், மாநிலச் செயலாளர் மு.ரமேஷ்,தமிழக இந்து மக்கள் இயக்க தலைவர் ப.குமரேசன் கலந்துகொண்டனர்.
Read more

ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில்வளையங்காட்டில் 17ஆம் ஆண்டு அன்னதான விழா

ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும் 17ஆம் ஆண்டு அன்னதான விழா வளையங்காடு மாகாளியம்மன் கோவில் திடலில் இன்று சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின்திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் KCMB.சீனிவாசன் ஜி கலந்து கொண்டுஅன்னதான விழாவை துவக்கி வைத்தார்.உடன்,GKS.பாலுஜிமாவட்டதுணைத் தலைவர்,R.கோவிந்தசாமி விவசாய அணி மாநில துணைத்தலைவர்,கார்த்திக் OBC அணி மாவட்ட தலைவர்,SM.தம்பி தங்கவேல் விவசாய அணிமாவட்ட பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Read more

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் விழா

திருப்பூர், காங்கேயம் சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்பட்டது.அத்திப்பூ கோலமிட்டும்,கேரள பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்தும் மாணவிகள் விழாவினைக் கொண்டாடினர்.
Read more

வெள்ளலூரில் பாண்டிய வேளாளர் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வெள்ளலூரில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 27.07.2025 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு சங்க நிர்வாகி R. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.இந்த விழா நிகழ்ச்சிக்கு வெள்ளலூர் சங்கத் தலைவர் E.K. கோதண்டசாமி தலைமையேற்பட்டார். மேலும், மதுக்கரை ஊராட்சி அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் மாரியப்பன் சிவகாமி சுந்தரி அவர்களின் மகன் சுந்தரமூர்த்தி,பத்தாம் வகுப்பில் வெள்ளலூர் சமுதாய அளவில் முதலிடம் பெற்ற சக்திவேல் – உமா அவர்களின் மகள் மிருத்யா ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இந்த விழாவில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இறுதியாக, தங்கவேல் (லக்ஷ்மி ஸ்டுடியோ) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
Read more

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் ‘புதுப்பேட்டை’ திரைப்படம்

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ஜூலை 26ல்புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ரிலீஸ் ஆகிறது.2006 ஆம் ஆண்டுசெல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில்தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.யுவன் சங்கர்ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.புதுப்பேட்டைதிரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட்கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Read more

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31நாட்களுக்கு நிறுத்தம்!

வருடாந்திர பராமரிப்பு பணிக்காக பழனி மலை முருகன் கோயிலில் இயங்கும்ரோப்கார் சேவை வரும் 15ம் தேதி முதல் 31 நாட்கள் இடைநிறுத்தம் செய்யப்படும்என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனிடையே, பக்தர்கள் மலைக்கோயிலுக்குச்செல்ல வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழிகளை பயன்படுத்தலாம் எனவும்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more

TAGS

TRENDING

WhatsApp
Instagram