Mar 02, 2026

சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார். அதிரடி வீரரான நேஹல் வதேராவை 9 ரன்களில் வீழ்த்திய அஸ்வின், பின்னர் வந்த மேக்ஸ்வெல்லை 1 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இதில் முகேஷ் சவுத்ரி வீசிய 2வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஸ்டாய்னிஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மறுமுனையில் அதிரடியாக ரன்களை குவித்த பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 75 ரன்களை விளாசியது. அதிலும் அஸ்வின் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. நேஹல் வதேரா சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். இருந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அஸ்வினை 7வது ஓவரை வீசுவதற்கு அழைத்தார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே நேஹல் வதேராவை 9 ரன்களில் அஸ்வின் வீழ்த்த, தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லையும் அதே ஓவரில் வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். அஸ்வினின் பவுலிங்கில் மேக்ஸ்வெல் ஆட்டமிழப்பது 7வது முறையாகும். சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின், கடைசி ஓவரில் மீண்டும் 3 சிக்ஸ் உட்பட 20 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இதனால் அஸ்வின் 4 ஓவர்களில் 5 சிக்ஸ் உட்பட 48 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்தடுத்து பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஷஷாங்க் சிங் அதிரடி காரணமாக எழுச்சி பெற்றுள்ளது. இதனால் சிஎஸ்கே கம்பேக் கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Tirupur Reporter
53/3 Sardha Nagar, 2nd Street,
Samundipuram,
Tirupur - 641603.
Copyright © 2025 Tirupur Reporter