Jun 03, 2026

திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கவளாகத்தில், பள்ளி
குழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புப் பணியின் ஒரு பகுதியாக, நோட்டுப்
புத்தகங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்,திருப்பூர்
மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கத்தின் தலைவர் A.மணி அவர்களின்
தலைமையில்,பழனிபாண்டியவேளாளர் சங்கத்தின் துணைத் தலைவர் K.C.K.சரவணன்,
அறங்காவலர்கள் S.M.சீனிவாசன், K.R.முருகானந்தம், செயற்குழு உறுப்பினர்
K.N.முருகானந்தம், திருப்பூர் மாவட்ட பாண்டிய வேளாளர் சங்க அவைத்தலைவர்
C.K.காளிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் A.தங்கவேல், C.ஆனந்தன், ராமசாமி
உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நோட்டுப்
புத்தகங்களை வழங்கினர்.சமூக நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக பாண்டிய
வேளாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.
Tirupur Reporter
53/3 Sardha Nagar, 2nd Street,
Samundipuram,
Tirupur - 641603.
Copyright © 2025 Tirupur Reporter