Mar 02, 2026
திருப்பூர் குமரன் குத்துச்சண்டை கழக மாணவர்கள் 2 வெள்ளி,5 வெண்கலப் பதக்கங்கள் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர்

விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் சங்கமம் கலைக்கல்லூரியில் கடந்த மே 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான INVITATIONAL BOXING CHAMPIONSHIP போட்டியில்,தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைக் குறிப்பாக Tirupur Kumaran Boxing Club மாணவர்கள் தங்கள் தேர்ச்சியான நடிப்பினால் கவனம் ஈர்த்தனர்.கீழ்காணும் மாணவர்கள் பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெள்ளிப் பதக்கம்:கி. மோனிஷ் – 50-55 கிலோ எடை பிரிவு,பரத் குமார் – 60-64 கிலோ எடை பிரிவு.வெண்கல பதக்கம்: யாதவ் – 44 கிலோ எடை பிரிவு,கவியரசு – 50-52 கிலோ எடை பிரிவு,முத்தமிழன் – 46-48 கிலோ எடை பிரிவு,நந்தீஸ்வரன் – 47-50 கிலோ எடை பிரிவு,முத்துசாரதி – 70-75 கிலோ எடை பிரிவு.இவ்வாறு மொத்தம் 7 பதக்கங்கள் (2 வெள்ளி,5 வெண்கல) பெற்று,இரண்டு
நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருப்பூர் மாணவர்கள் தங்கள் சாதனைகளால் அனைவரையும் கவர்ந்தனர்.இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்சியாளர் திரு.கா.ஜெகத்ரட்சகன்,மாணவர்களை பாராட்டி,மேலும் உயர்ந்த சாதனைகளுக்காக உற்சாகம் அளித்தார்.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tirupur Reporter
53/3 Sardha Nagar, 2nd Street,
Samundipuram,
Tirupur - 641603.
Copyright © 2025 Tirupur Reporter