Mar 02, 2026

உலக அளவில் அடுத்தடுத்து பல நாடுகளின் சந்தைகள் சரிவு அடைந்து உள்ளது. ஒரே நாளில் உலக மார்க்கெட் கதற தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போரால் மார்க்கெட் சரிவு உச்சம் அடைந்து உள்ளது.
புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து இருந்தார். அவர் எச்சரித்தபடியே உலக அளவில் பங்குச்சந்தை சரிய தொடங்கி உள்ளது.
வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார்.
பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம் பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான், என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
Tirupur Reporter
53/3 Sardha Nagar, 2nd Street,
Samundipuram,
Tirupur - 641603.
Copyright © 2025 Tirupur Reporter