Jul 28, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

வெள்ளலூரில் பாண்டிய வேளாளர் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வெள்ளலூரில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 27.07.2025 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு சங்க நிர்வாகி R. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.இந்த விழா நிகழ்ச்சிக்கு வெள்ளலூர் சங்கத் தலைவர் E.K. கோதண்டசாமி தலைமையேற்பட்டார்.

  • பழனி பாண்டிய வேளாளர் சங்கத் தலைவர் K.A.M. பன்னீர்செல்வம்,
  • திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கத் தலைவர் A. மணி,
  • பழனி பாண்டிய வேளாளர் மடத்தின் பொருளாளர் I. செந்தில்குமார்,
  • துணைத் தலைவர்கள் M. செந்தில்குமார், K.C.K. சரவணன்,
  • துணைச் செயலாளர் M. அய்யனார்,
  • அறங்காவலர்கள் N. சீனிவாசன், S.M. சீனிவாசன்,
  • சூலூர் முருகேஷ், கணியூர் ரவீந்திரன், உடுமலை முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.நிகழ்வின் போது மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், மதுக்கரை ஊராட்சி அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் மாரியப்பன் சிவகாமி சுந்தரி அவர்களின் மகன் சுந்தரமூர்த்தி,
பத்தாம் வகுப்பில் வெள்ளலூர் சமுதாய அளவில் முதலிடம் பெற்ற சக்திவேல் – உமா அவர்களின் மகள் மிருத்யா ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இறுதியாக, தங்கவேல் (லக்ஷ்மி ஸ்டுடியோ) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Recent News

WhatsApp
Instagram