Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Author: admin

தமிழ்நாடு சமூக ஆர்வலர் பாதுகாப்பு இயக்கம் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் – மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் அறிவிப்பு

திரு. கே.ஆர். ரவிச்சந்திரன், M.Com., D.Co-op – மாநில தலைவர் திரு. E. சந்திரன், B.Com., D.Co-op – மாநில செயலாளர் திரு. M. குமார், B.A., PGDCA – திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. R. ரவீந்திரன், B.A., PGDCA – திருவாரூர் மாவட்ட செயலாளர் திருமதி K. கலைச்சித்ரா, M.Sc., M.Phil. – திருவாரூர் மாவட்ட செயலாளர்(மகளிர் அணி) திரு. K. முருகேசன் – திருவாரூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் அவர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார்.
Read more

25 ஆம் ஆண்டு ஓம் சற்குரு மகா குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ்மிக்க ஆசிரமங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள ஓம் திரு சர்பலிங்கா ஈஸ்வரர் ஆலயம் , ஓம் திரு மெய்ஞான சற்குரு கருமலை சித்தர் தியான பீடம் இங்கு கருமலை சித்தர் சுவாமிகள் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னால் ஜீவ ஒடுக்கம் அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து நமது ஆசிரமம் கருமலை சித்தர் சுவாமிகளின் ஜீவனேஸ்வர ஐக்கிய திருநாளாம் மங்களகரமான விசுவாச வருடம் மிருகசீரிஷ நட்சத்திரமும் கூடிய சித்திரைத் திங்கள் 18 ம் நாள் 1-5-2025 வியாழக்கிழமை அன்று மிக விமர்சையாக 25 ஆம் ஆண்டு ஓம் சற்குரு மகா குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த குருபூஜை சுமார் நான்கு தலைமுறை பக்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த குருபூஜை விழாவை கொங்கு மண்டல ஸ்ரீ ஸ்ரீ நாராயண குரு ஜீயர் சுவாமிகளின் ஆன்மீக அருளாசிகளும் பக்த கோடிகளுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி யாகம், ஸ்ரீ மகா பஞ்ச பூதயாகம், ஸ்ரீ மகா அதிருத்ர யாகம், ஸ்ரீ மகா சண்டியாகும் மிகவும் சக்தி வாய்ந்த ரிக்,சாம , எஜுர் வேதங்களில் சிறப்பு வாய்ந்த சிவாச்சாரியார்களை கொண்டு நடைபெற்றது .நாம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை தீர்க்கக் கூடிய புண்ணியங்களை சேர்க்கக்கூடிய மகாமகேஸ்வர பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிவனடியார்கள் சாதுக்கள் தவ யோகிகள் தவஞானிகள் என்று பலரும் கலந்து கொண்டு ஆசி வழங்குகிறார்கள் பாரதம் மட்டுமல்லாது பல தேசங்களில் இருந்து பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு மெய்ஞான சற்குருவின் திருவருளைப் பெற்று அந்தப் பரம்பொருளான பரமேஸ்வரன் பார்வதி தேவியின் இன்னருளைப் பெற்று யாவரும் இன்புற்று வாழ்வோம் அனைத்து பக்தகோடிகளும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
Read more

15 மாவட்டங்களில் மழை இருக்கு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று கோவை விருதுநகர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. 
Read more

சீனாவில் பயங்கர புயல் – 800 விமானங்கள் ரத்து

சீனாவின் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது. மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சீனாவில் விமானம் தரையிறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருப்பிடங்களிலிருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறு மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த புயல் காற்றினால் 50 கிலோவுக்கும் குறைவான எடைகொண்டவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக சீனாவிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சீனா எதிர்கொள்ளும் பெரிய புயல் தாக்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more

ரூ.5 கோடி சம்பளத்தை உயர்த்திய அஜித்..!! குட் பேட் அக்லி படத்திற்கு எவ்வளவு..? த்ரிஷா, அர்ஜுன் தாஸ், ஜிவி பிரகாஷுக்கு எவ்வளவு தெரியுமா..?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.இந்நிலையில், திரைப்படம் ஏப்ரல் 10 திரையரங்குகளில் வெளியானது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் உலகளவில் 4 நாட்களில் ரூ.155 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்திற்கு ரூ.105 கோடி அஜித் சம்பளமாக வாங்கிய நிலையில், இப்படத்திற்கு தனது ஊதியத்தை ரூ.5 கோடி உயர்த்தியுள்ளார். இதனால் குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நடிகை த்ரிஷாவுக்கு ரூ.4 கோடியும், வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ரூ.50 லட்சமும், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த சுனிலுக்கு ரூ.50 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.3 கோடி ஊதியம் கொடுக்கக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு ரூ.4 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.190 கோடி முதல் ரூ 200 கோடி வரை தான் இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more

குழந்தைகளுக்கு டீ கொடுக்குறீங்களா..? ரொம்ப டேஞ்சர்..

மாறிவரும் வாழ்க்கை முறையால், குழந்தைகள் இளம் வயதிலேயே துரித உணவுகளுக்குப் பழக்கமாகி வருகின்றனர். இதனால் இளம் வயதிலேயே பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேநீர் அப்படிப்பட்ட ஒரு துரித உணவு கலாச்சாரம். ஏனென்றால் தேநீர் குடிப்பதால் சில பக்க விளைவுகளும் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்.தேநீரில் காஃபின் உள்ளது. இது குழந்தைகளுக்கு தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகளுக்கு தேநீர் கொடுப்பது நல்லதல்ல. தேநீருக்குப் பதிலாக மற்ற ஆரோக்கியமான பானங்கள் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல் அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் இருக்கும்போது தேநீர் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறார்கள். ஏனெனில் தேயிலை இலைகளில் மூலிகை பண்புகள் உள்ளன. இருப்பினும், இதில் மூலிகைகளுடன் சேர்ந்து, போதை தரும் காஃபின் என்ற பொருளும் உள்ளது. இது ஒரு வகையில் பெரியவர்களையும், மற்றொரு வகையில் குழந்தைகளையுமே பாதிக்கிறது. நீங்கள் தேநீர் குடிக்கும்போது, ​​அதில் உள்ள காஃபின் மூளையைத் தூண்டுகிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இது பெரியவர்களுக்கு நல்லது. இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு தூக்கத்தைத் தடுக்கிறது. ஆனால் இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. தேநீர் குடிப்பதால் குழந்தைகளின் மூளை நீண்ட நேரம் தூக்கம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. பெரியவர்கள் தேநீர் குடிக்கும்போது, ​​அதில் உள்ள காஃபின் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் உடலை விட்டு வெளியேறுகிறது. ஆனால் குழந்தைகள் தேநீர் குடித்தால், அது அவர்களின் உடலை விட்டு வெளியேற 10 முதல் 12 மணி நேரம் ஆகும்.  பக்க விளைவுகள் : உடலுக்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் தேவை. நாம் உண்ணும் உணவில் இருந்து உடல் இரும்பு மற்றும் கால்சியத்தை உறிஞ்சுகிறது. தேநீர் குடிப்பது இந்த செயல்முறையை மெதுவாக்குகிறது. வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, குறிப்பாக குழந்தைகளில். இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தேநீர் ஒரு சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதனால்தான் தேநீர் குடிப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்கிறார்கள். தேநீர் குடிப்பதால் சில குழந்தைகளுக்கு எரிச்சல், கோபம் அல்லது தலைவலி கூட ஏற்படலாம். தேநீருக்குப் பதிலாக நல்லது: தேநீருக்கு பதிலாக மஞ்சள் பால் குடிப்பது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. குழந்தைகளுக்கு புதினா தேநீர், சூடான எலுமிச்சை மற்றும் தேன் தண்ணீர் நல்லது. இவை தொண்டைப் புண்ணைக் குணப்படுத்துகின்றன. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
Read more

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்கியிருந்த சொகுசு ஓட்டலில் திடீர் தீ விபத்து..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியின் வீரர்கள் தங்கியிருந்தனர். சொகுசு ஹோட்டலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஸ்பாவில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவ தொடங்கியது. வீரர்கள் அனைவரும் தங்கள் அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். SRH அணி பேருந்தில் வெளியேறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகின்றன. தீ எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விபத்துக்குக் காரணமான காரணிகள் குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. ஹோட்டல் ஊழியர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். குறிப்பிடத்தக்க சேதம் இல்லாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தால் ஹோட்டலில் இருந்த விருந்தினர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
Read more

NEET MDS 2025 நுழைவுச் சீட்டு இன்று வெளியாகிறது.. எவ்வாறு பதிவிறக்குவது?

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) NEET MDS நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது. NBEMS இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நுழைவுச் சீட்டுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (NEET) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான natboard.edu.in இல் அணுகலாம்.NEET MDS தேர்வு ஏப்ரல் 19 ஆம் தேதி கணினி அடிப்படையிலான தேர்வு வடிவத்தில் நடைபெற உள்ளது. முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் NEET MDS நுழைவுச் சீட்டு 2025 ஐப் பதிவிறக்கம் செய்யலாம். NEET MDS 2025 நுழைவுச் சீட்டை எவ்வாறு பதிவிறக்குவது? 1. natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ NBEMS இணையதளத்தைப் பார்வையிடவும். 2. ‘NEET MDS அட்மிட் கார்டு 2025’க்கான இணைப்பைக் கண்டறியவும். 3. உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பிவிடப்பட இணைப்பைக் கிளிக் செய்யவும், அங்கு நீங்கள் உங்கள் சான்றுகளை உள்ளிட வேண்டும். 4. பின்னர் NEET MDS 2025 நுழைவுச் சீட்டு திரையில் தோன்றும். 5. எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து சேமிக்கவும். NEET MDS தேர்வுக்கான டெமோ இணைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கிறது என்பதை வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வேட்பாளர்கள் நேரடியாக டெமோவை அணுகலாம். NEET MDS தேர்வு முறை: NEET MDS தேர்வு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவற்றுடன் நேரப் பிரிவுகளும் உள்ளன. திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி:
Read more

அதிரடி..!! இனி பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது..!! வருகிறது புதிய நடைமுறை..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

புதுடில்லி: 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தும் திட்டம் இம்மாத இறுதியில் டில்லியில் அமல் செய்யப்பட உள்ளது.டில்லியில் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கையும் முக்கிய காரணம். பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், பழைய வாகனங்கள் மூலம் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் ஆகியவற்றுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இருப்பினும், அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நம்பர் பிளேட் எண் அடிப்படையில் வாகன விவரங்களை கண்டறியும் தானியங்கி கேமரா நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் அரசின் திட்டம் தள்ளிக்கொண்டே வந்தது. இந் நிலையில், டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆகியோர் திட்டத்தை அமல்படுத்து குறித்து ஆலோசித்து வருகின்றனர்.தற்போது நகரின் 500 எரிபொருள் நிலையங்களில், 477ல் தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு விட்டன. 23 மட்டுமே மீதமுள்ளன. அதுவும் அடுத்த 10 நாட்களுக்குள் தயார் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் தடை உத்தரவு இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more

பகலில் தூங்குபவரா நீங்கள்?.. சோர்வாக உள்ளதா.. அப்போ இந்த நோய் கன்ஃபார்ம்.. என்னனு பாருங்க

பகல் நேரத்தில் அதிகமாக தூங்கும் பழக்கம் மற்றும் சோர்வாக உள்ள நபர்களுக்கு டிமென்ஷியா மறதி நோய்க்கான வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவசரமான இந்த உலகில் வேலைப் பளு, கல்வி, அதீத கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை ஏற்பட்டு பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். தூக்கமின்மையால் கோபம், எரிச்சல் மற்றும் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகமாக தூங்குபவர்கள் மற்றும் உற்சாகமே இல்லாமல் சோர்ந்து காணப்படுபவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகளவில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் உலக அளவில் 5.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வசிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 சதவீதம் பேர் அல்சைமர் எனும் பொதுவான மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனராம். உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களில் இந்த டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏழாவது முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நோயால் பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதும், அவர்களின் ஆயுள் காலம் இதனால் குறைவதும் தெரியவந்துள்ளது. இளமைக் காலத்தில் தூக்கம் என்பதை இழப்பது முதுமையில் பல்வேறு பிரச்னைகளை நமக்கு ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு பகலில் அடிக்கடி தூக்கம் வருவது அல்லது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்ந்து காணப்பட்டாலோ டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. முதியவர்களுக்கு ஏற்படும் மறதி குறித்து நியூயார்க்கில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான முடிவுகள் நியூராலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பகல் நேரங்களில் வயதானவர்களுக்கு மிகவும் அதிகமாக தூக்கம் வருவது போன்று இருந்தாலோ அல்லது எந்த வேலையையும் செய்ய தோன்றாமல் சோர்வாக காணப்படுவது டிமென்ஷியா மறதி நோய்க்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. மேலும், முதியவர்களில் பலருக்கு நியாபக சக்தி, அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. 76 வயதுடைய 445 பேரிடம் சுமார் மூன்றாண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நியாபக சக்தி, தூக்கம், நடப்பது உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் பகல் நேரங்களில் தூங்குவது, சோர்ந்து காணப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு 35. 5 சதவீதம் டிமென்ஷியா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வில் 268 பேருக்கு நன்றாக தூங்கி எழுவதாகவும், 177 பேர் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது ஏற்கனவே 42 பேருக்கு நியாபக சக்தியில் பிரச்னை இருப்பதும், 36 பேருக்கு நியாப சக்தியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் ஆய்வாளர் விக்டோயர் லெராய் கூறுகையில், தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வின் மிக முக்கிய நோக்கம். தூக்கமின்மையால் அவதிப்படும் மக்கள் கட்டாயம் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற வேண்டும். இதன் மூலம் அறிவுத் திறனில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம் என்றார்.
Read more

TAGS

TRENDING

WhatsApp
Instagram