Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

நெசவாளர் காலனி அரசு பள்ளி மாணவரின் சாதனை

திருப்பூர்,மே16:திருப்பூர் மாநகராட்சியின் நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற பனியன் தொழிலாளியின் மகன் வீர மணிகண்டன், 2025-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 497/500 என்ற அதிரடியான மதிப்பெண்கள் பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளார்.வீர மணிகண்டன் தனது பாடங்களில் மிகுந்த முயற்சியுடன் பாடங்களை கற்றதுடன், குடும்பத்திற்கான பொருளாதார சவால்களை தாண்டி, தனது கல்விச் சாதனையில் வெற்றி பெற்றுள்ளார்.திருப்பூர் மாநகர மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக,வீர மணிகண்டனை சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி,வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.இவையறிந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களும் மாணவனை பாராட்டி, எதிர்காலத்தில் இன்னும்
உயர்ந்த இடங்களை எட்ட வேண்டுமென வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News

WhatsApp
Instagram