Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

மின்கம்பங்களை மறைத்த செடி கொடிகள் அகற்றம்!

ஈ.பி.அ. சரவணனின் புகாரைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை

திருப்பூர்,மே16:திருப்பூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில், மின்கம்பங்களை மறைத்திருந்த செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.போயம்பாளையம் ஆர் கே நகர் பகுதியில், பல மாதங்களாக மின்கம்பி, டிரான்ஸ்பார்மர்கள் மீது செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக சூழ்ந்திருந்தன. இது காரணமாக, மின் கம்பங்களை அடையாளம் காணவே முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.மின்சாரம் கடத்தக்கூடிய மரம், செடி, கொடிகள் மூலம்,அருகில் செல்லும் பொதுமக்கள் மின்சாரம் தாக்கும் அபாயம் நிலவுவதால், இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அவிநாசியில் நடைபெற்ற மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டத்தில்,திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவனர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ. சரவணன்,திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை
பொறியாளர் சுமதி அவர்களிடம் புகைப்படங்களுடன் கூடிய மனுவை அளித்திருந்தார்.அதன் விளைவாக,தற்போது ஆர் கே நகர் மின்வாரிய அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மின் கம்பிகளை முற்றிலுமாக மூடியிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக மரக்கிளைகளும் வெட்டப்பட்டு
அகற்றப்படுகின்றன.மின்னியல் சாதனங்களில் தொட்டுக்கொண்டிருக்கும் மரக்கிளைகள், கொடிகள் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு.முன்னெச்சரிக்கையாக அவை அடையாளம் காணப்பட்டதும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Recent News

WhatsApp
Instagram