Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Author: admin

1800 கோடி வசூல் நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு..

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஹீரோவான அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த புஷ்பா 2 ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் அவருடைய புதிய படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.43 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அல்லு அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் புஷ்பா 2 திரைப்படத்திற்காக ரூ. 300 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Read more

இன்றும் 3 கேட்ச் டிராப்.. சிஎஸ்கே பீல்டர்களா.. கூடுதலாக 50 ரன்கள் விளாசிய பஞ்சாப்.. கதறும் ரசிகர்கள்

சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார். அதிரடி வீரரான நேஹல் வதேராவை 9 ரன்களில் வீழ்த்திய அஸ்வின், பின்னர் வந்த மேக்ஸ்வெல்லை 1 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முகேஷ் சவுத்ரி வீசிய 2வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஸ்டாய்னிஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மறுமுனையில் அதிரடியாக ரன்களை குவித்த பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 75 ரன்களை விளாசியது. அதிலும் அஸ்வின் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. நேஹல் வதேரா சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். இருந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அஸ்வினை 7வது ஓவரை வீசுவதற்கு அழைத்தார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே நேஹல் வதேராவை 9 ரன்களில் அஸ்வின் வீழ்த்த, தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லையும் அதே ஓவரில் வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். அஸ்வினின் பவுலிங்கில் மேக்ஸ்வெல் ஆட்டமிழப்பது 7வது முறையாகும். சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின், கடைசி ஓவரில் மீண்டும் 3 சிக்ஸ் உட்பட 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் அஸ்வின் 4 ஓவர்களில் 5 சிக்ஸ் உட்பட 48 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்தடுத்து பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஷஷாங்க் சிங் அதிரடி காரணமாக எழுச்சி பெற்றுள்ளது. இதனால் சிஎஸ்கே கம்பேக் கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Read more

“பழிக்குப் பழி..” அமெரிக்கா மீது 34% இறக்குமதி வரியை அறிவித்த சீனா! தொடங்கியது வர்த்தக போர்?

பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% ஆக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது. சீன வர்த்த அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. மேலும், கணினி பாகங்கள், மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய உலோகம் மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு, அமெரிக்காவின் 27 நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை அல்லது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஹை பாயின்ட் ஏரோடெக்னாலஜிஸ், போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான யுனிவர்சல் லாஜிஸ்டிக்ஸ் ஹோல்டிங் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது. “அமெரிக்கா விதித்துள்ள ‘பரஸ்பர வரிகள்’ உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறுவதாகவும், உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக சேதப்படுத்துவதாகவும், விதிகள் சார்ந்த பலதரப்பு வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கை கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகவும் உள்ளது. இது உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒருதலைப்பட்சமான, கொடுமைப்படுத்தக்கூடிய நடைமுறையாகும். சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது,” என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Read more

ரத்தக்களறியாக மாறிய உலக வர்த்தகம்! டிரம்ப்பால் பல லட்சம் கோடி அழிந்தது!

உலக அளவில் அடுத்தடுத்து பல நாடுகளின் சந்தைகள் சரிவு அடைந்து உள்ளது. ஒரே நாளில் உலக மார்க்கெட் கதற தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போரால் மார்க்கெட் சரிவு உச்சம் அடைந்து உள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து இருந்தார். அவர் எச்சரித்தபடியே உலக அளவில் பங்குச்சந்தை சரிய தொடங்கி உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம் பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான், என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
Read more

பழனியில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனியில் ஏப். 10, 11, 12 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து.சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.ஏப். 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து.
Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு.

2024-25ல் தமிழ்நாடு 9.69% வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களால் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்ன தமிழக அரசு பெருமிதம்.
Read more

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

“சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பது மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Read more

TAGS

TRENDING

WhatsApp
Instagram