Jul 29, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Category: தமிழகம்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருப்பூர் மாணவர்கள் பதக்கப் பலம்!

திருப்பூர் குமரன் குத்துச்சண்டை கழக மாணவர்கள் 2 வெள்ளி,5 வெண்கலப் பதக்கங்கள் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர் விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் சங்கமம் கலைக்கல்லூரியில் கடந்த மே 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான INVITATIONAL BOXING CHAMPIONSHIP போட்டியில்,தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைக் குறிப்பாக Tirupur Kumaran Boxing Club மாணவர்கள் தங்கள் தேர்ச்சியான நடிப்பினால் கவனம் ஈர்த்தனர்.கீழ்காணும் மாணவர்கள் பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெள்ளிப் பதக்கம்:கி. மோனிஷ் – 50-55 கிலோ எடை பிரிவு,பரத் குமார் – 60-64 கிலோ எடை பிரிவு.வெண்கல பதக்கம்: யாதவ் – 44 கிலோ எடை பிரிவு,கவியரசு – 50-52 கிலோ எடை பிரிவு,முத்தமிழன் – 46-48 கிலோ எடை பிரிவு,நந்தீஸ்வரன் – 47-50 கிலோ எடை பிரிவு,முத்துசாரதி – 70-75 கிலோ எடை பிரிவு.இவ்வாறு மொத்தம் 7 பதக்கங்கள் (2 வெள்ளி,5 வெண்கல) பெற்று,இரண்டுநாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருப்பூர் மாணவர்கள் தங்கள் சாதனைகளால் அனைவரையும் கவர்ந்தனர்.இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்சியாளர் திரு.கா.ஜெகத்ரட்சகன்,மாணவர்களை பாராட்டி,மேலும் உயர்ந்த சாதனைகளுக்காக உற்சாகம் அளித்தார்.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more

திருப்பூர் மேற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திட்டமிடல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!” என்ற இலட்சியத்தை முன்னேற்று செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களின் வழிகாட்டலிலும்,பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.கே. சங்கர் அவர்களின் தலைமையிலும்,திருப்பூர் மேற்கு மாவட்டம் பொங்கலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள கழகத் தலைவர் பிறந்தநாள் விழா தொடர்பாகவும்,ஊராட்சி மற்றும் சார்பு அணிப் பொறுப்பாளர்களின் இறுதிப்பட்டியல் தயாரித்தல்.மேலும்,ஊராட்சி பகுதிகளில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.எஸ்.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.முக்கியக் கழக பொறுப்பாளர்கள்:இணைச் செயலாளர் தீன தயாளன்,துணைச் செயலாளர் பிரகாஷ்,பொருளாளர் கோகுல்,தகவல் தொழிநுட்ப அமைப்பாளர் ஷாஜி மேலும் நிகழ்வில் பங்கேற்றவர்கள்.செயற்குழு உறுப்பினர்கள்: ஈஸ்வரமூர்த்தி,பென்னி,விஜய் ராகவன்.ஊராட்சி செயலாளர்கள்: நாச்சிபாளையம் சுப்பிரமணி,தொங்கட்டிபாளையம் – கார்த்திகேயன்,வ. அவிநாசி பாளையம் – ஆறுமுகம்,கண்டியன் கோவில் – கோபால்,அழகுமலை – மகேஷ் குமார்.தகவல் தொழிநுட்ப பிரிவு:ஜெகன் பிரபு,மனோஜ்.இளைஞரணி:வசந்த்.வெற்றிவேல் தொண்டரணி:பிரபு,ராமசுந்தரம் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டு ஆலோசனைகளை முன்வைத்து, கழகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தனர்.
Read more

பெருமாநல்லூர் வியாபாரிகள் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட நாதம்பாளையத்தில், பெருமாநல்லூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சக்கரவர்த்தி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பனங்காட்டு ராஜேந்திரன் தலைமையாற்றினார். செயலாளர் சிவலிங்கம், கௌரவத் தலைவர் சிவலிங்கம், பொருளாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முக்கியப்பங்காற்றினர்.நன்றி உரையை இளைஞரணி இணைச் செயலாளர் எல். பி. கோபிநாத் நிகழ்த்தினார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.
Read more

நெசவாளர் காலனி அரசு பள்ளி மாணவரின் சாதனை

திருப்பூர்,மே16:திருப்பூர் மாநகராட்சியின் நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற பனியன் தொழிலாளியின் மகன் வீர மணிகண்டன், 2025-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 497/500 என்ற அதிரடியான மதிப்பெண்கள் பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளார்.வீர மணிகண்டன் தனது பாடங்களில் மிகுந்த முயற்சியுடன் பாடங்களை கற்றதுடன், குடும்பத்திற்கான பொருளாதார சவால்களை தாண்டி, தனது கல்விச் சாதனையில் வெற்றி பெற்றுள்ளார்.திருப்பூர் மாநகர மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக,வீர மணிகண்டனை சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி,வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.இவையறிந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களும் மாணவனை பாராட்டி, எதிர்காலத்தில் இன்னும்உயர்ந்த இடங்களை எட்ட வேண்டுமென வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
Read more

மின்கம்பங்களை மறைத்த செடி கொடிகள் அகற்றம்!

ஈ.பி.அ. சரவணனின் புகாரைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை திருப்பூர்,மே16:திருப்பூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில், மின்கம்பங்களை மறைத்திருந்த செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.போயம்பாளையம் ஆர் கே நகர் பகுதியில், பல மாதங்களாக மின்கம்பி, டிரான்ஸ்பார்மர்கள் மீது செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக சூழ்ந்திருந்தன. இது காரணமாக, மின் கம்பங்களை அடையாளம் காணவே முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.மின்சாரம் கடத்தக்கூடிய மரம், செடி, கொடிகள் மூலம்,அருகில் செல்லும் பொதுமக்கள் மின்சாரம் தாக்கும் அபாயம் நிலவுவதால், இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அவிநாசியில் நடைபெற்ற மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டத்தில்,திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவனர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ. சரவணன்,திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் சுமதி அவர்களிடம் புகைப்படங்களுடன் கூடிய மனுவை அளித்திருந்தார்.அதன் விளைவாக,தற்போது ஆர் கே நகர் மின்வாரிய அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மின் கம்பிகளை முற்றிலுமாக மூடியிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக மரக்கிளைகளும் வெட்டப்பட்டுஅகற்றப்படுகின்றன.மின்னியல் சாதனங்களில் தொட்டுக்கொண்டிருக்கும் மரக்கிளைகள், கொடிகள் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு.முன்னெச்சரிக்கையாக அவை அடையாளம் காணப்பட்டதும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read more

திருப்பூர் வீரர்கள் மாநில ஸ்கேட்டிங் போட்டியில் அசத்தல் சாதனை 

மே 4: தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 600 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் 15 பேர் பங்கேற்று, Roller Sports Association-ல் பயிற்சி பெற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இவர்கள் மொத்தமாக 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். இவர்கள் சாதனையை பெற்றோர்களும் பயிற்சியாளர் திரு பா. பிரகாஷ் அவர்களும் பாராட்டினர்.
Read more

தமிழ்நாடு சமூக ஆர்வலர் பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி வருகை 06.05.2025 – அறிவிப்பு

தமிழ்நாடு சமூக ஆர்வலர் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் தலைமையில், நமது இயக்கத்தின் சட்ட ஆலோசகர் திரு. துரிஸ்பிஸ்வாஸ் (உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்) மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில், நமது சமூக ஆர்வலர்கள் எழுப்பிய மேல்முறையீட்டு புகார்கள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் கிடைக்காத மனுக்களை அடிப்படையாகக் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப் போகிறோம். குறிப்பு: 20.04.2025 வரை மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் அவர்களிடம் மனுவை அனுப்பியவர்கள் மட்டுமே இச்சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும்.21.04.2025க்கு பிறகு அனுப்பிய மனுக்கள் குறித்து பிறிதொரு நாளில் அறிவிக்கப்படும். மாநில தலைவர்திரு. கே. ஆர். ரவிச்சந்திரன்(தமிழ்நாடு சமூக
Read more

தமிழ்நாடு சமூக ஆர்வலர் பாதுகாப்பு இயக்கம் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் – மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் அறிவிப்பு

திரு. கே.ஆர். ரவிச்சந்திரன், M.Com., D.Co-op – மாநில தலைவர் திரு. E. சந்திரன், B.Com., D.Co-op – மாநில செயலாளர் திரு. M. குமார், B.A., PGDCA – திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. R. ரவீந்திரன், B.A., PGDCA – திருவாரூர் மாவட்ட செயலாளர் திருமதி K. கலைச்சித்ரா, M.Sc., M.Phil. – திருவாரூர் மாவட்ட செயலாளர்(மகளிர் அணி) திரு. K. முருகேசன் – திருவாரூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் அவர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார்.
Read more

25 ஆம் ஆண்டு ஓம் சற்குரு மகா குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ்மிக்க ஆசிரமங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள ஓம் திரு சர்பலிங்கா ஈஸ்வரர் ஆலயம் , ஓம் திரு மெய்ஞான சற்குரு கருமலை சித்தர் தியான பீடம் இங்கு கருமலை சித்தர் சுவாமிகள் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னால் ஜீவ ஒடுக்கம் அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து நமது ஆசிரமம் கருமலை சித்தர் சுவாமிகளின் ஜீவனேஸ்வர ஐக்கிய திருநாளாம் மங்களகரமான விசுவாச வருடம் மிருகசீரிஷ நட்சத்திரமும் கூடிய சித்திரைத் திங்கள் 18 ம் நாள் 1-5-2025 வியாழக்கிழமை அன்று மிக விமர்சையாக 25 ஆம் ஆண்டு ஓம் சற்குரு மகா குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த குருபூஜை சுமார் நான்கு தலைமுறை பக்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த குருபூஜை விழாவை கொங்கு மண்டல ஸ்ரீ ஸ்ரீ நாராயண குரு ஜீயர் சுவாமிகளின் ஆன்மீக அருளாசிகளும் பக்த கோடிகளுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி யாகம், ஸ்ரீ மகா பஞ்ச பூதயாகம், ஸ்ரீ மகா அதிருத்ர யாகம், ஸ்ரீ மகா சண்டியாகும் மிகவும் சக்தி வாய்ந்த ரிக்,சாம , எஜுர் வேதங்களில் சிறப்பு வாய்ந்த சிவாச்சாரியார்களை கொண்டு நடைபெற்றது .நாம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை தீர்க்கக் கூடிய புண்ணியங்களை சேர்க்கக்கூடிய மகாமகேஸ்வர பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிவனடியார்கள் சாதுக்கள் தவ யோகிகள் தவஞானிகள் என்று பலரும் கலந்து கொண்டு ஆசி வழங்குகிறார்கள் பாரதம் மட்டுமல்லாது பல தேசங்களில் இருந்து பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு மெய்ஞான சற்குருவின் திருவருளைப் பெற்று அந்தப் பரம்பொருளான பரமேஸ்வரன் பார்வதி தேவியின் இன்னருளைப் பெற்று யாவரும் இன்புற்று வாழ்வோம் அனைத்து பக்தகோடிகளும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
Read more

15 மாவட்டங்களில் மழை இருக்கு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று கோவை விருதுநகர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. 
Read more

Category

Tags

Trending

WhatsApp
Instagram