Mar 02, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Category: தமிழகம்

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில்பெற்றோர்–ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் இன்று பெற்றோர்–ஆசிரியர் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கல்வியாண்டில் மாணவிகளின் கல்வி முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் எதிர்காலம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரிச்செயலர் அருட்சகோதரி முனைவர் அருள்சீலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இ. சேனாவரையன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெற்றோர்–ஆசிரியர் ஒத்துழைப்பு மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை என அவர் வலியுறுத்தினார். கல்லூரிச்செயலர் அருட்சகோதரி முனைவர் அருள்சீலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இ. சேனாவரையன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெற்றோர்–ஆசிரியர் ஒத்துழைப்பு மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை என அவர் வலியுறுத்தினார்.
Read more

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அகில பத்திரிகை ஊடக சங்கம் அஞ்சலி

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அகில பத்திரிகை ஊடக சங்கம் மாநில தலைவர் S.நெல்லை அசரீயா, மாநிலபொதுச் செயலாளர் கோபிநாத்,அட்வகேட் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.மறைந்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து, அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
Read more

இந்து பாதுகாப்பு படை சார்பில் ஈரோட்டில் இந்து எழுச்சி மாநாடு

ஈரோட்டில் நடைபெற்ற இந்து பாதுகாப்பு படை நடத்தும் இந்து எழுச்சி மாநாட்டில்,இந்துசமத்துவ கட்சி தலைவர் உழைப்பாளி பூபாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தமாநாட்டில் இந்து சமத்துவ கட்சி மற்றும் தமிழக இந்து மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் ரா.ஈஸ்வர பாண்டியன், மாநிலச் செயலாளர் மு.ரமேஷ்,தமிழக இந்து மக்கள் இயக்க தலைவர் ப.குமரேசன் கலந்துகொண்டனர்.
Read more

ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில்வளையங்காட்டில் 17ஆம் ஆண்டு அன்னதான விழா

ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும் 17ஆம் ஆண்டு அன்னதான விழா வளையங்காடு மாகாளியம்மன் கோவில் திடலில் இன்று சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின்திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் KCMB.சீனிவாசன் ஜி கலந்து கொண்டுஅன்னதான விழாவை துவக்கி வைத்தார்.உடன்,GKS.பாலுஜிமாவட்டதுணைத் தலைவர்,R.கோவிந்தசாமி விவசாய அணி மாநில துணைத்தலைவர்,கார்த்திக் OBC அணி மாவட்ட தலைவர்,SM.தம்பி தங்கவேல் விவசாய அணிமாவட்ட பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Read more

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் விழா

திருப்பூர், காங்கேயம் சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்பட்டது.அத்திப்பூ கோலமிட்டும்,கேரள பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்தும் மாணவிகள் விழாவினைக் கொண்டாடினர்.
Read more

வெள்ளலூரில் பாண்டிய வேளாளர் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வெள்ளலூரில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 27.07.2025 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு சங்க நிர்வாகி R. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.இந்த விழா நிகழ்ச்சிக்கு வெள்ளலூர் சங்கத் தலைவர் E.K. கோதண்டசாமி தலைமையேற்பட்டார். மேலும், மதுக்கரை ஊராட்சி அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் மாரியப்பன் சிவகாமி சுந்தரி அவர்களின் மகன் சுந்தரமூர்த்தி,பத்தாம் வகுப்பில் வெள்ளலூர் சமுதாய அளவில் முதலிடம் பெற்ற சக்திவேல் – உமா அவர்களின் மகள் மிருத்யா ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இந்த விழாவில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இறுதியாக, தங்கவேல் (லக்ஷ்மி ஸ்டுடியோ) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
Read more

திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கம் சார்பில்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கவளாகத்தில், பள்ளிகுழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புப் பணியின் ஒரு பகுதியாக, நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்,திருப்பூர்மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கத்தின் தலைவர் A.மணி அவர்களின்தலைமையில்,பழனிபாண்டியவேளாளர் சங்கத்தின் துணைத் தலைவர் K.C.K.சரவணன்,அறங்காவலர்கள் S.M.சீனிவாசன், K.R.முருகானந்தம், செயற்குழு உறுப்பினர்K.N.முருகானந்தம், திருப்பூர் மாவட்ட பாண்டிய வேளாளர் சங்க அவைத்தலைவர்C.K.காளிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் A.தங்கவேல், C.ஆனந்தன், ராமசாமிஉள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்கினர்.சமூக நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக பாண்டியவேளாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.
Read more

தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கோரிக்கை மனு

பொங்குபாணையம், அய்யம்பாளையம், கிருஷ்ணா நகர்,சக்தி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்.இந்த பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும், இப்பகுதிக்கு அரசு பேருந்து போக்குவரத்தும் இல்லை என்பதால், பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வயதானவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கலெக்டரிடம் தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
Read more

கேப்டன் மறைந்தாலும் மறையாத மனித நேயம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவராக   இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவப்புதல்வன் சண்முக பாண்டியன் நடித்து வெளிவந்த படை தலைவன் திரைப்படம் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில்வெளியிடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படம் காண்பதற்கு முன்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறிகுழந்தை வேல் அறிவுறுத்தலின்படி  மாவட்ட தேமுதிகவினர் குஜராத் மாநிலத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தேமுதிக நிர்வாகிகள் பின்பு படைத்தலைவன் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.மேலும் இத்திரைப்படம் மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்ததாக பெருமையோடு தெரிவித்தனர்.இதில் பகுதி கழகச் செயலாளர்கள் உதயா பிரபு,சண்முகராஜா,ஆனந்தன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கருப்புசாமி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் முத்துக்குமார பாண்டி,ரத்தினம்,திருமதி ஷர்மிளா பாரதி மற்றும் தேமுதிக மாநகர் மாவட்ட பகுதி வார்டு நிர்வாகிகள் பெருந்திரளாக இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர்.
Read more

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருப்பூர் மாணவர்கள் பதக்கப் பலம்!

திருப்பூர் குமரன் குத்துச்சண்டை கழக மாணவர்கள் 2 வெள்ளி,5 வெண்கலப் பதக்கங்கள் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர் விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் சங்கமம் கலைக்கல்லூரியில் கடந்த மே 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான INVITATIONAL BOXING CHAMPIONSHIP போட்டியில்,தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைக் குறிப்பாக Tirupur Kumaran Boxing Club மாணவர்கள் தங்கள் தேர்ச்சியான நடிப்பினால் கவனம் ஈர்த்தனர்.கீழ்காணும் மாணவர்கள் பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெள்ளிப் பதக்கம்:கி. மோனிஷ் – 50-55 கிலோ எடை பிரிவு,பரத் குமார் – 60-64 கிலோ எடை பிரிவு.வெண்கல பதக்கம்: யாதவ் – 44 கிலோ எடை பிரிவு,கவியரசு – 50-52 கிலோ எடை பிரிவு,முத்தமிழன் – 46-48 கிலோ எடை பிரிவு,நந்தீஸ்வரன் – 47-50 கிலோ எடை பிரிவு,முத்துசாரதி – 70-75 கிலோ எடை பிரிவு.இவ்வாறு மொத்தம் 7 பதக்கங்கள் (2 வெள்ளி,5 வெண்கல) பெற்று,இரண்டுநாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருப்பூர் மாணவர்கள் தங்கள் சாதனைகளால் அனைவரையும் கவர்ந்தனர்.இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்சியாளர் திரு.கா.ஜெகத்ரட்சகன்,மாணவர்களை பாராட்டி,மேலும் உயர்ந்த சாதனைகளுக்காக உற்சாகம் அளித்தார்.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more

Category

Tags

Trending

Newsletter Signup Form
WhatsApp
Instagram